ஒரு பில்லியன் இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம்!
ஐக்கிய அரபு அமீரகமானது உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் ஆல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) ஆரம்பிக்கப்பட்ட ‘10 million meals’ திட்டமானது ‘100 million meals’ என அதிகரிக்கப்பட்டுக் கடந்த வருடம் ‘One Billion Meals’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
50 நாடுகள்
அதே போல் இந்த வருடமும் துபாய் பிரதமர் ‘One Billion Meals’ திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 50 நாடுகளில் உள்ள ஏழை, எளிய சமூகங்களுக்கு உணவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஷேக் முகமது தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“உலகில் ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் பசியால் வாடுகின்றனர். எனவே, அவர்களின் பசியாற்றப் பல தசாப்தங்களுக்கு நிலையான முறையில் மில்லியன் கணக்கில் உணவை வழங்குவதே இந்த முயற்சியின் குறிக்கோள்.
ஐ.நா சபையின் இலக்கு
புனித மாதத்தின் ஆரம்பத்தில் எங்கள் வருடாந்த பாரம்பரியத்தின்படி, ரமழான் திருநாளில் ‘ஒரு பில்லியன் உணவு’ என்ற நன்கொடை திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum, Vice President and Prime Minister of UAE and Ruler of Dubai, has announced the launch of 'One Billion Meals'.This initiative is launched every year to secure food aid for vulnerable communities in 50 countries. pic.twitter.com/lF8RtfUFXK
— Startup Dubai (@RealStartupDXB) March 20, 2023
அதேவேளை, இந்த திட்டத்தின் மூலம் பிறரது பசியாற்றப் பல தசாப்தங்களாக ஒரு பில்லியன் உணவுகளை நிலையான வழியில் வழங்குவதே குறிக்கோள்.
கடவுள் விருப்பத்தினால் ஐக்கிய அரபு அமீரகம் மக்களுக்குத் தொடர்ந்து தொண்டு மற்றும் தடையற்ற நன்மையை உறுதிசெய்கிறது. என்றும் தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய சமூகங்கள் கடந்த ஆண்டு, ஜோர்டான், இந்தியா, பாகிஸ்தான், லெபனான், கிர்கிஸ்தான், அங்கோலா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்த நன்கொடை பிரச்சாரம் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு பில்லியன் மீல்ஸ் திட்டம், உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான உலகளாவிய தேவைக்குப் பதிலளிக்கப்படும்.
மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் ஐ.நா சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு 2ஐ அடைவதற்கான முயற்சிகளை ஆதரிப்போம்.” என கூறப்பட்டுள்ளது.
