விவசாயிகளுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
Mannar
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Raghav
விவசாய துறைக்கு தேவையான உர மானியத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மன்னார் (Mannar) மாவட்டத்தில் இன்று (17.04.2025) நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காணி பிரச்சினை
மேலும், விவசாய நடவடிக்கைக்கு தேவையான காணி பிரச்சினையை தீர்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இந்த ஆண்டு சிறுபோகத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி