இலங்கைக்கான இலவச விசா! சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித்திட்டம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலவச விசா
இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டத்தை கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு இலங்கை ஆரம்பித்திருந்தது.
The pilot project of Free Visa to seven countries will be extended until 30th April 2024 , A final decision to be taken during the next few weeks of the pilot project. pic.twitter.com/WYEgwsAQo1
— Harin Fernando (@fernandoharin) April 1, 2024
இதன்படி, இந்தியா, சீனா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் விசா வழங்கப்படும் காலம் நேற்றைய (31) தினத்துடன் நிறைவடைந்திருந்த நிலையில், குறித்த திட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்திய பயணிகள்
வெளிநாடொன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ, விசா வழங்கப்படும் காலத்தை நீடிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் விசா வழங்கும் காலம் நீடிக்கப்படுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா பல ஆதரவுகளை வழங்கியதாக குறித்த நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |