மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இன்று கூடுகிறது சுதந்திர கட்சியின் மத்திய குழு!
Colombo
Economy
SLFP
SriLanka
Maithripala sirisena
Shantha Bandara
By Chanakyan
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில்சிறிலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டார (Shantha Bandara) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவின் காரியாலயத்தில் வைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி