மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து காய் நகர்த்தும் மைத்திரி
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்தார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய சிறு கட்சிகளை சந்திக்கவுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை வீழ்த்தி சுதந்திர கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.