27 வருடங்களின் பின்னர் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய பிரெஞ்ச் ஏர்லைன்ஸ்
katunayake
land
air france
By Sumithiran
27 வருடங்களின் பின்னர் பிரெஞ்ச் ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பிரெஞ்சு ஏர்வேஸ் விமானமான AF-268 நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பிரான்சின் பாரிஸில் இருந்து மாலைதீவு வழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.விமானத்தில் 65 பயணிகளும் இருந்தனர்.
இன்று முதல், பிரான்ஸின் பாரிஸ் மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையில் வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை இடம்பெறும். இந்த பிரெஞ்சு எயார்லைன்ஸ் விமானங்கள் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 11.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும், மீண்டும் மதியம் 12.40 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து பாரிஸுக்குப் புறப்படும்.


