அரசாங்கம் அறிவித்ததை செயற்படுத்தவில்லை - கொந்தளிக்கும் மருத்துவர்கள்
சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாடு முழுவதும் 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் தமக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒதுக்கப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பல மணிநேர காத்திருப்பு
இதனால், சுகாதாரப் பணியாளர்கள் பல மணிநேரம் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், சிலருக்கு எரிபொருள் கிடைக்கவில்லை.
இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை உட்பட நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hi @kanchana_wij and @Keheliya_R now it's 3.30pm hope you see this! We health care workers are in this fuel que 'dedicated for health staff' since 4am. The petrol bowser is still to arrive here. A liver transplant surgeon in the que had to visit a patient awaiting transplant.??♂️ pic.twitter.com/2D6H4NDOFB
— Rajeev Menon ?? (@rajeevmenonsl) June 24, 2022
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தவறிய அரசு
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், இந்த முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக பல சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
இந்த முறையை இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால் அது சுகாதாரத் துறையின் வீழ்ச்சியையே ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
