ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணத்திலேயே கியூ ஆர் முறை வெற்றி
எரிபொருள் விநியோகம்
இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே
’கியூ.ஆர்’ நடைமுறை வெற்றியளித்திருக்கின்றது என இலங்கை பெட்ரோல் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ’கியூ.ஆர்’ நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில், 6 ஆயிரம் லீற்றருக்கும் அதிகளவான பெட்ரோல் ’கியூ.ஆர்’ நடைமுறைக்கு ஏற்ப வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏனைய மாவட்டங்களில் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 41 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெட்ரோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 லட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.