எரிபொருள் மானியங்களால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம்

Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Sathangani May 30, 2026 03:35 AM GMT
Report

தற்போது சந்தையில் விற்பனை செய்யும் எரிபொருட்களினால் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய அளவிலான கட்டமைப்பு நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளின் அடிப்படையில், மானியங்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலும் ஏற்படும் நஷ்டம் மிக அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாதாரண பொதுமக்களாலும் போக்குவரத்துத் துறையினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு கூட்டுத்தாபனம் பெருமளவு நட்டத்தைத் தாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் தமிழ் பிரஜை ஒருவர் கைது

கனடாவில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் தமிழ் பிரஜை ஒருவர் கைது

இறக்குமதிச் செலவு 

ஒரு லீற்றர் பெட்ரோல் 92 ரக எரிபொருளை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான இறக்குமதிச் செலவு 273.59 ரூபாயாகவும், அதற்கான வரி 136.58 ரூபாயாகவும் காணப்படுகிறது.

எரிபொருள் மானியங்களால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம் | Fuel Crisis Cpc Suffers Losses Due To Fuel Subsidy

இதன் மூலம் அதன் உண்மையான சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் ஒரு லீற்றருக்கு 34.59 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

இதேபோல், பெட்ரோல் 95 ரகத்தில் ஒரு லீற்றருக்கு 22.46 ரூபாய் நட்டம் பதிவாகியுள்ளது. மறுபுறம், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் இந்த நட்டத்தின் அளவு மிக மோசமாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து அபராதம் முறையில் இணையவழி அச்சுறுத்தல்! காவல்துறை எச்சரிக்கை

போக்குவரத்து அபராதம் முறையில் இணையவழி அச்சுறுத்தல்! காவல்துறை எச்சரிக்கை

மின்சக்தி அமைச்சு

ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் இறக்குமதி செலவு 560.85 ரூபாயாகவும், வரி 163.27 ரூபாயாகவும் உள்ள நிலையில், அதன் சூத்திர விலை 749.70 ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

எரிபொருள் மானியங்களால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம் | Fuel Crisis Cpc Suffers Losses Due To Fuel Subsidy

எனினும், அது சந்தையில் 382 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், ஒவ்வொரு லீற்றர் ஒட்டோ டீசலுக்கும் கூட்டுத்தாபனம் 367.70 ரூபாய் என்ற பாரிய நட்டத்தைச் சந்தித்து வருகிறது. சுப்பர் டீசலைப் பொறுத்தவரை இந்த நஷ்டம் மேலும் அதிகரித்து லீற்றருக்கு 397.07 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, எவ்வித வரிகளும் விதிக்கப்படாத மண்ணெண்ணெய், ஒரு லீற்றர் 550.24 ரூபாய் இறக்குமதிச் செலவுடன், 580.53 ரூபாய் சூத்திர விலையைக் கொண்டிருந்த போதிலும், அது வெறும் 255 ரூபாய்க்கே நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விற்பனையிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 325.53 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளமை மின்சக்தி அமைச்சின் தரவுகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016