கனடாவில் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் தமிழ் பிரஜை ஒருவர் கைது
கனடாவில் சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நகர சபையின் முன்னாள் ஊழியரான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதான சார்லஸ் மாணிக்கம் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சமூக மையத்தில் வைத்து சிறுவர்கள் இருவரை பாலியல் ரீதியாக அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள்
இதன்படி சந்தேக நபர் மீது பாலியல் ரீதியான மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உடல் ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vaughan நகர சபையின் முன்னாள் ஊழியரான சந்தேக நபர், பணியில் இல்லாத போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஊழியர் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக Vaughan நகர சபை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபரினால் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |