இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு - அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டீசலை பெற்றுக்கொள்ள வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இரண்டு நாட்களுக்குள் எரிபொருள் வரிசையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளமையால் மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால், முன்னுரிமை பட்டியல் அடிப்படையிலேயே, நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அச்சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேலதிகமாக உள்ள எரிபொருளை எதிர்வரும் 03 நாட்களுக்குள் இலங்கை முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இன்று மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் தாமதம்
Reviewed fuel distribution & Instructed to distribute additional stocks of all products islandwide in the next 3 days. Lapses in distribution, delays in unloading & delays in payments for orders by Fuel stations has created long lines. Plan to reduce the lines in the next 2 days.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 27, 2022
எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள், தரையிறக்குவதில் உள்ள தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடான முற்பதிவுகளுக்கான கட்டண செலுத்துகையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் வரிசைகள் தோன்றியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!