எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அடுத்த எரிபொருள் விலை திருத்தம் நாளை மறுநாள் (31) நடைபெற உள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, பிரித்தானிய சந்தையில் ஒரு பரல் பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 86.66 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 81.73 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கடந்த சில வாரங்களாக உலக சந்தை எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மிகவும் நிலையற்றதாக இருந்து வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இரண்டிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது.
இத்தகைய நகர்வுகள் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், நிலவும் உலகளாவிய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாதாந்த அல்லது அவ்வப்போது உள்நாட்டு விலை திருத்தங்கள் அவசியமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |