இன்று மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்
எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக எரிபொருள் விலைகளில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாத நிலையில், இம்முறை விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைக்க அரசு நடவடிக்கை
இதேவேளை ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாக பதிவாகியிருந்தது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 பதிவாகியிருந்தது.
போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கு திணறி வரும் நிலையில் இந்த மாதம் எரிபொருள் விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
