இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 2,000 வாகனங்கள்
அடுத்த வருட ஆரம்பத்தில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத் (Ruwan Senarath) அறிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் தலைவர்களின் பயன்பாட்டிற்காக குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அபிவிருத்தி திட்டங்களை அடிமட்ட அளவில் செயற்படுத்த, உள்ளூராட்சித் தலைவர்களுக்கு கிராமப்புறங்களைச் சென்றடைவதற்கான வழிகளை வழங்குவது அவசியம்.
போக்குவரத்தை இலகுபடுத்தல்
அதிகாரிகள் அங்கு சென்று திரும்புவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு சில வாகனங்கள் தேவை. எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை செயற்படாத உள்ளூராட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்த பல புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
