மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
பெரியோர் சொல்லுக்கு மரியாதை அளிக்கும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 3, 4, 5 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் முயற்சிகளுக்கு ஏற்ற தன லாபம் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவார்கள்.
ரிஷப ராசி
சூரிய பகவான் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய நிலையை உண்டாக்குவார். வித்யாகாரகன் புதன் உங்களை சிந்தித்து செயல்பட வைப்பார். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.
குருவின் பார்வை வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சில இடங்களில் வேலை சவாலாக இருக்கும், சில இடங்களில் போராட்டமாக இருக்கும்.
உத்தியோக ரீதியாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் நடக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் எச்சரிக்கையாக ஈடுபடலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி உற்சாகம் பெருகும், பிள்ளைகளால் சில சிக்கல்கள் வரலாம்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக ஏற்றமான பலன்கள் இருக்கும். குருவின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் செலவு கட்டுப்படும். துாக்கமின்றி தவித்த நிலை மாறும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்யம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குரு பார்வை சுக ஸ்தானத்திற்கு கிடைப்பதால் எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். சூரிய பகவானால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். லாப செவ்வாயால் வருமானம் உயரும்.
புதன் பகவானால் பண வரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். ராசிநாதனால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும்.
தனுசு
சூரியனும் நேற்றைய முயற்சியை வெற்றியாகும். பெரிய மனிதர்கள் தொடர்பால் உங்கள் வேலை நடக்கும். ராகு பகவான் அதனை வெற்றியாக்குவார். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.
சுக்கிரன் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வார். ஏழாமிட குரு உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வேலைக்காக மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பாக்ய சூரியன் மனதில் பயத்தை ஏற்படுத்துவார். இருந்தாலும் குருபகவான் உங்களுடைய தைரியத்தை அதிகப்படுத்துவார். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வருமானமும், செல்வாக்கும் உயரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
