விரைவில் திரைக்கு வரும் விருதுகளைக் குவித்த ஈழத்தின் பொம்மை திரைப்படம்
நமது கதைகளை சொல்ல வேண்டுமென்ற முயற்சியில் நமக்கான சினிமா மெதுவாக முளைத்து வளரத் தொடங்கியிருக்கிறது.
இந்த வரிசையில் ”பொம்மை“ திரைப்படம் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இத்திரைப்படத்தை IBC தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சர்வதேச திரைப்பட விழா
நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா போன்ற இலங்கையின் திறமை மிக்க நடிக நடிகைகளின் கூட்டு முயற்சியில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.
இதேவேளை, பொம்மை திரைப்படமானது சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழக சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது.
அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் இயக்கம் - நவயுகா குகராஜா ஒளிப்பதிவு - மதுனி ஹிரன்யா அழகக்கோன் | வற்சு இசை - M.ரஜனிகாந்த் படத்தொகுப்பு - மாருதி.K தயாரிப்பு வடிவமைப்பு - ஜோசுவா ஹெபி ஒலி வடிவமைப்பு - சிக பூபதிராஜா முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளர் - விக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
