எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலை இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி ஓகஸ்ட் 31 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.
எரிபொருள் விலை
அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.
325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
எனினும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படாமல் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் ஒரு 185 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போதுமான தரகுத் தொகையை செலுத்தாததால், எதிர்காலத்தில் பல எரிபொருள் நிலையங்களை மூட வேண்டியிருக்கும் என்று பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
