திடீரென விலை குறைக்கப்பட்ட எரிபொருள்! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் புதிய அறிவிப்பொன்றை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் தந்து உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் விலை
அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 415 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலைகள் அதேவகையில் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Price of Petrol 92 will be reduced by Rs 40 per liter & Price of Auto Diesel by Rs 15 per liter from 9pm today. The new price of Petrol 92 will be Rs 370 per liter & Auto Diesel Rs 415 per liter. Prices on other petroleum products will remain the same. pic.twitter.com/wZdP5OhzZ6
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 17, 2022