ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து சடுதியாக சரிந்த எண்ணெய் விலைகள்!
ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 7% சரிந்து, ஒரு பீப்பாய்க்கு 99 டொலருக்கும் கீழே குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, அதன் விலை 114 டொலராகப் பதிவாகியிருந்தது.
அத்தோடு, அமெரிக்க WTI எண்ணெய் விலையும் 8% சரிந்து, ஒரு பீப்பாய்க்கு 90 டொலராகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்ரம்பின் அறிவிப்பு
வார இறுதியில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த இரண்டு நாட்களாக ஈரானுடன் "மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

Image Credit: BBC
இதன் விளைவாக, ஈரானின் எரிசக்தி அமைப்பின் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்கப் போர் திணைக்களத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |