எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு - புதிய விலைகள் இதோ…!
புதிய இணைப்பு
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும்,
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை வழங்கியதையடுத்தே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
(1) Fuel Price will be revised from 3am today. Fuel pricing formula that was approved by the cabinet was applied to revise the prices. Price revision includes all costs incurred in importing, unloading, distribution to the stations and taxes. Profits not calculated and included.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 23, 2022
முதலாம் இணைப்பு
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு
எரிபொருட்களின் விலைகள் இன்று (23) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும், அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இதுதொடர்பில் இதுவரை உத்தியோபூர்வமான அறிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.