நள்ளிரவு அல்லது நாளை உயரப்போகும் எரிபொருள் விலை..!
எரிபொருள் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இன்று (21) அல்லது நாளை (22) அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தும் என்று அவர் கூறினார்.
இதேவேளை எரிபொருள் வழங்கும் கியூஆர் குறியீடு இன்று (21) நள்ளிரவுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும்.
கியூஆர் குறியீடு புதுப்பிப்பு
அதன்படி, நுகர்வோர் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் வாரத்திற்கு புதுப்பிக்கப்பட்ட கியூஆர் குறியீட்டின் கீழ் எரிபொருளைப் பெற வாய்ப்பு கிடைக்கும்.

இன்று (21), வாகனப் பதிவு எண்ணில் ஒற்றை இலக்க எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களால் எரிபொருள் வழங்கப்படும்.
இதற்கிடையில், இன்று (21) எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒரு எரிபொருள் நிலையத்திலிருந்து ஓடர் பெறப்பட்டால், அந்த ஓடர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர்மயூர நெத்திகுமரகே தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |