நள்ளிரவு முதல் மீண்டும் பாரியளவில் அதிகரித்தது எரிபொருள் விலை
srilanka
fuel price
mid night
ioc
By Sumithiran
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு விபரம் வருமாறு, • பெட்ரோல் 92 - ரூ.338 • பெட்ரோல் 95 - ரூ.367 • பெட்ரோல் யூரோ 3 - ரூ. 347 • ஓட்டோ டீசல்- ரூ. 289 • சூப்பர் டீசல் - ரூ. 327


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி