மீண்டும் எரிபொருளுக்கு கியு ஆர் முறை...!
                                    
                    Fuel Price In Sri Lanka
                
                                                
                    Vasudeva Nanayakkara
                
                                                
                    National Fuel Pass
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில் எனவும் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை உயரும்
உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        