30,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பல் நேற்று (12) பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
விநியோகிக்கும் பணிகள்
இந்த நிலையில் அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏப்ரல் மாதத்தில் 12 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித பற்றாக்குறையுமின்றி பராமரிக்கப்படுவதாகவும், கோரப்பட்ட எரிபொருள் திட்டமிட்டபடி வந்து சேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |