எரிபொருள் தட்டுப்பாடு! பாதிக்கப்பட்டுள்ள பேருந்து சேவைகள்
People
Bus
SriLanka
Gemunu Vijayaratne
By Chanakyan
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன (Gemunu Vijayaratne) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உரிமையாளர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்கு தீர்வைக் கோரி எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்