எரிபொருள் நிலையத்தில் கொள்ளை - சிசிடிவி கமெராவில் கையும் களவுமாக சிக்கிய இருவர்
கொழும்பு கொள்ளுபிட்டி, ப்ளவர் வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து 71,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் அங்கு எரிபொருள் இயந்திரத்திற்கு அருகில் இருந்த பணப் பெட்டகத்தில் இருந்து இவ்வாறு பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
சிசிடிவி கமெரா காட்சிகளின் ஊடாக மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு 10 இல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் வியாபாரி
இந்நிலையில், சந்தேக நபர்களும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட கொள்ளையடித்த பணத்தில் 45,000 ரூபாவையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்பவர் எனவும் மற்றையவர் மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
