அநுரவுக்கு முழு ஒத்துழைப்பு! நிலைப்பாட்டை அறிவித்த மனோ எம்.பி
இனவாதத்தை ஒழிக்க, உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சற்றுமுன், ஜனாதிபதி தமிழ்_முஸ்லிம் கட்சிகளை அவசரமாக சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு
இன்று (22-11-25) பிற்பகல் 1மணிக்கு ஆரம்பித்து, ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

இனவாதத்தை ஒழிக்க, "இலங்கையர் தினத்தை" நடத்த, ஜனாதிபதி அநுர, எம்மை அழைத்து, எமது ஒத்துழைப்புகளை கோரினார்.
எனது பதில் உரையில் நான் கூறியதாவது,
"இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம்." "நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்க பட வேண்டும்.
அதற்கு சமாந்திரமாக, 'இலங்கையர் அடையாளம்' பேணி வளர்க்க பட வேண்டும்.
'உரிமைகளின் சமத்துவம்
இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், 'உரிமைகளின் சமத்துவம் இருக்க வேண்டும்.
மேலும், இலங்கை தின கொண்டாட்டங்களின் போது, இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவ படுத்தும், முகமாக கலாச்சார ஊர்வலம் நடத்துங்கள்.
அத்தோடு, இலங்கையின் பன்மைத்துவம் பற்றி, முதலில் இலங்கையர் அறிந்து கொள்ள வழி செய்யுங்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், என்னுடன் பழனி திகாம்பரம் எம்பியும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் கலந்து கொண்டனர்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |