பொதுத் தேர்தலுக்கான நிதி: கிடைத்தது அங்கீகாரம்
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், 2024.11.14 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு திகதி குறித்தொதுக்கப்பட்டது.
ஆனாலும், 2024 வரவு செலவுத் திட்டத்தில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
நிதி ஒதுக்கீ்டு
அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்காக திறைசேரியில் இருந்து நிதியை விடுவிப்பதற்கு அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிப்பதற்காக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு ஏற்புடைய 2025 ஆம் ஆண்டில் ஈடுசெய்யப்பட வேண்டிய செலவான 06 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை 2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் இடைக்கால நிறைவேற்றும் சரணக்கின் மூலம் ஒதுக்கி வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |