நாடாளுமன்ற தேர்தல் 2024 : பொதுஜன பெரமுனவின் அதிரடித் தீர்மானம்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு (Sri Lanka Podujana Peramuna) தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் (Sagara Kariyawasam) உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுத் தேர்தல்
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம்.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியின் வெற்றியை உறுதி செய்யவும் பலமான அணிகளை உருவாக்கி வருகிறோம்.
மேலும், கட்சியை விட்டு வெளியேறி சென்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேட்புமனுக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் (PC) மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (LG) முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச (namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், சில உறுப்பினர்களை கட்சிக்குள் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |