குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று - பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய வெலமிடியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (31) சுதந்திர சதுக்கத்தில் முழு அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.
இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வித்யாலங்கார பிரிவேனாவில் இருந்து புறப்பட்டு கண்டி வீதி, களனி பாலம், பேஸ்லைன் வீதி, பண்டாரநாயக்க சந்தி, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை சந்தி, சிறைச்சாலை சந்தி, பொரளை சந்தி, டி.எஸ்.சேனநாயக்க சந்தி வழியாக பயணிக்கவுள்ளது.
இதனை முன்னிட்டு குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகள், உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.