இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 15 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை முழுவதும் நேற்று மாத்திரம் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களில் 08 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 3 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 1 ஆணும் 2 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 08 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,806.ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,880 ஆக அதிகரித்துள்ளது.