கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
deaths
By Vanan
இலங்கையில் மேலும் 40 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் இதுவரை 13,059 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 22 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.