மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
                                    
                    Mahinda Amaraweera
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Ceylon Electricity Board
                
                                                
                    Sri Lanka Electricity Prices
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    மழை தொடருமானால் எதிர்காலத்தில் மக்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்சார கட்டணத்தை செலுத்துவதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம்
தற்போது முழு திறனையும் உபயோகித்து தற்பொழுது நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், ஆனாலும் திடீரென விலையை குறைக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணம் வழங்கப்படுமாயின் அதனை அமைச்சரவைக்கு அறிவித்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்