காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப் பெற்றமை : ஹக்கீம், நிசாம் காரியப்பருக்கு கஜேந்திரகுமார் நன்றி
வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெறவேண்டி வந்தததை இட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அந்தக்கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்துள்ளார்.
காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தரப்புடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை இவர்கள் இருவரும் செய்தமையாலேயே அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
துணிச்சலுடன் கருத்துக்கனை முன்வைத்தனர்
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவாதங்களிலும், பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர்கள் துணிச்சலுடன் ஆணித்தரமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்துக்களை முன்வைத்து, அழுத்தம் வழங்கியிருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
