காலி - எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடிதடி!! சுகாதார ஊழியர்கள் மீதும் தாக்குதல்
காலியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வந்த வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
காலி கோட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு சென்ற நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்து.
சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
எரிபொருள் வரிசையில் டோக்கன் பெற்ற குழுவினர் எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து வேறு எந்த வாகனத்தையும் எரிபொருள் எடுக்க அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிறுவனம் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொள்கலனை அனுப்பி வைத்துள்ளது.
இதனையடுத்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அங்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் வந்திருந்தனர்.
ஆனால், டோக்கன் பெற்றவர்கள் எரிபொருள் பெற்ற பின்னர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
