போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் தேசிய தொலைக்காட்சியையே ஸ்தம்பிக்க வைத்த நபர் கைது!
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த ரந்திமல் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேரலையில் கருத்து
A video released by #Rupavahini shows a few protestors entering the premises and engaging the staff in conversation. #LKA #SriLanka #Tv pic.twitter.com/s3SqeggqZL
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) July 13, 2022
இவர் காலி போராட்டத்தின் போது, இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கைப்பற்றியதோடு, தொலைக்காட்சியில் நேரலையில் மக்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து தேசிய தொலைக்காட்சி சேவை முற்றாகத் தடைப்பட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் அரச ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சாதகமான செய்திகளையே ஒளிபரப்புவது வழக்கமாக இருக்கின்ற போதிலும், அன்றைய தினம் இலங்கையில் தேசிய தொலைக்காட்சி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சாதகமான ஒளிபரப்பை செய்துள்ளமை வரலாற்றில இடம்பிடித்திருந்தது.
கைது
இவ்வாறு காலிமுகத்திடல் போராட்டக் காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Live from infront of the #Rupavahini which is the national TV channel #lka #SriLanka #SriLankaCrisis pic.twitter.com/VhQQR21TiW
— Vidiyal.lk ?? (@Vidiyallk) July 13, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
