தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - ஸ்தம்பித்த சேவை!
இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றியதோடு, தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள் மக்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தொலைக்காட்சி சேவை முற்றாகத் தடைப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் அரச ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சாதகமான செய்திகளையே ஒளிபரப்புவது வழக்கமாக இருக்கின்ற போதிலும், இன்றைய தினம் இலங்கையில் தேசிய தொலைக்காட்சி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சாதகமான ஒளிபரப்பை செய்துள்ளமை வரலாற்றில இடம்பிடித்துள்ளது.
அத்துடன் "ரூபவாஹினி தொலைக்காட்சி இனிமேல் பக்கச்சார்பற்ற ஊடக நிறுவனமாக இருக்க வேண்டும்" என அந்த நேரலையில் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவர் கூறியிருந்தார்.
இதேவேளை போராட்டக்காரர்கள் ITN தொலைக்காட்சி நிறுவனத்தை முற்றுகையிடலாம் என அச்சத்தில் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ITN தொலைக்காட்சி சேவையும் முடங்கியுள்ளது.
இதனையடுத்து அங்கும் சிறிலங்கா இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கட்டத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பல கால்துறையினர் நேற்று அங்கிருந்து வெளியேறியதுடன்.
அவர்களுக்கு பதிலாக விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பியதுடன், அரசாங்கம் புதிய திட்டமிடலை செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sri Lanka National Television off air at the moment, after protesters entered the station pic.twitter.com/lRN7jK4Ec5
— Azzam Ameen (@AzzamAmeen) July 13, 2022