வெள்ளவத்தையில் மக்கள் ஆர்ப்பாட்டம் - தடைப்பட்டது போக்குவரத்து(படம்)
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
By Sumithiran
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் காரணமாக கொழும்பு காலி வீதியின் வெள்ளவத்தை பகுதியில் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் மண் எண்ணெய் வழங்குமாறு கோரி வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதிக்கு அருகில் காலி வீதிக்கு குறுக்காக கூடி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக காலி வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.