சாகர தொடர்பில் கடும் கவலையில் கம்மன்பில - எப்படி சுகம் என நலனும் விசாரித்தார்
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்துக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போதே சாகரவும், கம்மன்பிலவும் சந்தித்துக்கொண்டனர்.
ஆளுங்கட்சிக் கூட்டத்துக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் கம்மன்பிலவும் கலந்துகொண்டார். இதன்போது கூட்டம் நடைபெறும் அறையின் கதவருகில், நின்றுகொண்டிருந்த சாகர காரியவசத்தை பார்த்த கம்மன்பில, “சாகர எப்படி சுகம்” என்று வினவியுள்ளார்.
இதற்கு சாகரவிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும்,'சாகரவை நினைக்கும்போது உண்மையில் கவலையாக இருக்கிறது. ஏனென்றால், எரிபொருள்களின் விலை அதிகரிப்பைக் காரணம்காட்டி, நான் பதவி விலக வேண்டுமென எழுதிக் கொடுக்கப்பட்ட கடிதத்தில் சாகர கையெழுத்திட்டுள்ளார்.'என இதன்போது கம்மன்பில வாசுவிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.