சிறையில் அடைக்க அரசாங்கம் சதி திட்டம்: கம்மன்பில குற்றச்சாட்டு
தன்னை சிறையில் அடைக்க அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமய தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு அரசு சாரா அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரால் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தில் (CIABOC) தனக்கு எதிராக அண்மையில் முறைபாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவு எண்
இந்த நிலையில் இந்த முறைபாடானது அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது எனவும் மற்றும் அதைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படும் அரசு சாரா நிறுவனத்திடம் செல்லுபடியாகும் பதிவு எண் கூட இல்லை எனவும் கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில், தவறுகளைத் திருத்துவதற்குப் பதிலாக உண்மையை வெளிப்படுத்துபவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சில அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் அவரைக் கைது செய்ய வலியுறுத்துவதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
19 மணி நேரம் முன்