கம்பஹா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : தொலைபேசி அழைப்பில் வந்த அச்சுறுத்தல்
கம்பஹா (Gampaha) - அகரவிட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா - அக்கரவிட்ட பகுதியில் கடந்த 08.03.2025 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் மோட்டார் சைக்கிளில் உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றினுள் இருந்த இருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விரிவான விசாரணை
சம்பவத்தில் கடுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த தாக்குதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்தது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உயிர் அச்சுறுத்தல்
ஒரு பெயர் தெரியாத நபரெருவர் காயமடைந்தவரிடம், "நீங்கள் இன்னும் இறக்கவில்லையா?" எனக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவருக்கு பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விரிவான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்