தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடலாம் : மனோ எம்.பி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி (ITAK) நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில் (Colombo) போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்கள் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிட்டால் உங்களுடைய கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமா என கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசு கட்சியை கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை .
இலங்கையில் கட்சிகள் என்ற வகையில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் போட்டியிடாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமை அவர்கள் எங்களுடைய நண்பர்கள் அவர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
செய்தி : பு.கஜிந்தன்
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்