கணேமுல்ல சஞ்சீவ கொலை : துப்பாக்கிதாரி புத்தளத்தை தேர்ந்தெடுத்தது ஏன்...
புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொலை செய்த துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கிதாரி எதற்காக புத்தளம் (Puttalam) நோக்கி பயணிக்க வேண்டியிருக்கின்றது என்ற கேள்வியெழுந்துள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் கட்டுநாயக்க பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏனைய பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடியின்றி சாதாரணமாக காணப்பட்ட போதே இவர் கைது செய்யப்படுகின்றார்.
கடந்த காலத்தில் பாதாள உலகக் குழுவினர் இந்தியாவிற்கு செல்வதற்கு பயன்படுத்திய பாதை மன்னார் பாதை. இது புலனாய்வுத் துறையினருக்கு நன்கு தெரிந்த பாதை. இதை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.
இந்த கொலையின் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பான், கம்பஹா, ராகமை போன்ற இடங்களில் இருக்கின்ற நிலையில் குறித்த நபர் புத்தளத்தின் ஊடாக இந்தியா சென்று அங்கிருந்து டுபாய் சென்று அதனூடாக ஜப்பான் செல்லுகின்ற திட்டம் இருந்திருக்கலாம்.
மேலும் குறித்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட உடனேயே ஒரு படுகொலையை செய்தவர் முகத்தில் இருக்க வேண்டிய குழப்பநிலை, பதற்றம் என்பன அவரின் முகத்தில் இல்லை. அவர் உடைகளை கூட சாதாரணமாக மாற்றியிருக்கின்றார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
