தாயிடம் ஒப்படைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் சடலம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
புதிய இணைப்பு
பிரேத பரிசோதனைக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை அடக்கம் செய்ய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் காவல்துறை பிணவறையில், சஞ்சீவவின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
சுட்டுக் கொல்லப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவொன்றின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விட்ட நிலையில் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை வாழைத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்கறிஞர் வேடமணிந்து
குறித்த சம்பவம் பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே இடம்பெற்றது.
வழக்கறிஞர் வேடமணிந்து வந்த நபரொருவரும் மற்றும் அவருக்கு உதவியாக பெண்ணொருவரும் திட்டமிட்டு குறித்த சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதுடைய சந்தேகநபரை புத்தளம் பாலவி பகுதியில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
குடும்பப்பெயரில் ஏற்பட்ட மாற்றம்
கனேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விட்ட நிலையில் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொடையைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி முன்வந்த போதிலும், அவரது குடும்பப்பெயரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சடலம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதேவேளை கனேமுல்ல சஞ்சீவவின் மனைவி இருந்தும் அவர் சடலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் முன்வரவில்லை என்றும் சடலம் தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
