தெலுங்கானாவின் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்த துணை உயர் ஸ்தானிகர் கேதீஸ்வரன்
தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் (Ganesanathan Geathiswaran) தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மாவை (Jishnu Dev Varma) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள லோக் பவனில் கடந்த 10ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் ஹைதராபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சக கிளை செயலகத்தின் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி (Vishnu Vardhan Reddy) மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு வருமாறு அழைப்பு
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை துணை உயர் ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் எடுத்துரைத்ததுடன் தெலுங்கானா ஆளுநரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன், தெலுங்கானாவின் துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமர்காவை (Mallu Bhatti Vikramarka) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமர்கா இலங்கையின் தற்போதைய வெள்ள நிலைமை குறித்து விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்