இரு குழுக்களுக்கிடையே மோதல் - ஒருவர் பலி
இரத்தினபுரி – தெல்கொடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மோதல் சம்பவம் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சிகிச்சை பெற்று வந்த இருவரை பார்வையிடுவற்காக சென்ற சிலருக்கிடையில் வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் மோதல் வலுப்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை

இதன்போது கத்தியால் குத்தி ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெல்கொடை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேகநபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.