இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

Sri Lanka Police Colombo Sri Lanka
By Raghav Aug 19, 2024 08:22 AM GMT
Report

இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (18) கொழும்பு - மாலம்பே கஹந்தோட்டை பகுதியில், மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அறையில் குளிரூட்டப்பட்ட நிலையில், 174 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது

வாடகை வீடு

சுற்றிவளைப்பின் போது, ​​சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருள் ஒன்றை பொதி செய்த வண்ணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது | Ganja Garden In A Two Story House

கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் பத்து கோடி ரூபா எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தேயிலையை பொதி செய்யும் நிலையமாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த வீடு வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் வேலைக்கு சென்ற நபர் திடீர் மரணம்

யாழில் வேலைக்கு சென்ற நபர் திடீர் மரணம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் : சஜித் உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் : சஜித் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025