பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த குப்பை மேடு!
World
Landslide
By Dharu
பிலிப்பைன்ஸில் ஒரு பெரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 38 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் குப்பைக் கிடங்கில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், குப்பை மேடு இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
38 பேர் இன்னும் காணவில்லை
பாதிக்கப்பட்டவர்களில் குப்பைக் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்களும் அடங்குவர் என்றும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் தொழிலாளர்கள் அல்லாதவர்களும் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 38 பேர் இன்னும் காணவில்லை என்றும் செபு நகர மேயர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி