வேலை முடிந்து வீடு திரும்பியவேளை தவறிவீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா
isolation
corona
police
garment factory
By Jaso
ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவர் தொழில்முடிந்து வீடு திரும்பிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தசம்பவம் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
வத்துப்பிட்டிவல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் குறித்த நபரே, நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதுகுறித்து வந்த தகவலைத் தொடர்ந்து உடலை மீட்ட நிட்டம்புவ பொலிஸார், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். குறித்த சடலத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சடலத்தைத் தொட்ட நிட்டம்புவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்