சம்பள உயர்வு கோரி பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் தீவிரப் போராட்டம்

Bangladesh World Protest
By Pavi Nov 03, 2026 11:33 AM GMT
Report

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்துமாறு கோரி, பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தற்போது வழங்கப்படும் 12,500 டாக்கா குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை 30,000 டாக்காவாக உயர்த்துமாறு கோரி, தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இராணுவ நடவடிக்கையோ போரோ அல்ல:அமெரிக்கா செய்தது போர்க்குற்றம்:ஈரானின் நீதித்துறை அமைச்சர் காட்டம்

இராணுவ நடவடிக்கையோ போரோ அல்ல:அமெரிக்கா செய்தது போர்க்குற்றம்:ஈரானின் நீதித்துறை அமைச்சர் காட்டம்

சம்பள நிர்ணய சபை

இதனையடுத்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் அதிர்ச்சிக் குண்டுகளைப் பயன்படுத்தி காவல்துறை போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.

சம்பள உயர்வு கோரி பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் தீவிரப் போராட்டம் | Garment Workers In Bangladesh Protests Pay Rise

மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷின் ஆடை உற்பத்தித் துறையில் சுமார் 40 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

அத்துடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை இத்துறை வழங்கி வருகிறது. இந்நிலையில், போராட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆடைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் 8,000 டாக்காவிலிருந்து 12,500 டாக்காவாக அதிகரிக்கப்பட்டது.

எனினும், அதன் பின்னர் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, தற்போதைய சம்பளம் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை எனத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சம்பள நிர்ணய சபையொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

இருப்பினும், சம்பள உயர்வு தொடர்பில் இதுவரை உறுதியான அறிவிப்பு வெளியாகாததால் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்காக ஆடைகளை உற்பத்தி செய்து வழங்கும் பங்களாதேஷின் ஆடைத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் போராட்டம், நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்து விற்பனை: வர்த்தகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்து விற்பனை: வர்த்தகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று - ஆழ்கடல் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று - ஆழ்கடல் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி